PCR மாதிரிகள் கிடப்பில்- GMOA எச்சரிக்கை

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பெறப்பட்ட சுமார் 20000 பி.சி.ஆர் மாதிரிகளுக்கான முடிவுகளை வௌியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தகவல் வௌியிட்டுள்ளது. 

அதனால் அதிக அபாயமுள்ள பகுதிகளில் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்று காரணமாக 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 7000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு உட்பட பல மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் நடைமுறையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் இயந்திரம் பழுதுபட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய சீனாவில் இருந்து குழு ஒன்று வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் இயந்திரம் பழுதுபட்டுள்ளதன் காரணமாக 20000 பி.சி.ஆர் மாதிரிகளுக்கான முடிவுகளை வௌியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 80 வீதம் வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமெனில், அதிக ஆபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும்.

ஏற்கனவே பெறப்பட்ட சுமார் 20 ஆயிரம்  PCR பரிசோதனை மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அவற்றை விரைவாக பரிசோதனைக்கு உட்படுத்தாத பட்சத்தில், உரிய பெறுபேறுகளைப் பெற்றுக் முடியாது போகும்.

அத்துடன், கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் சீரான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.