இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வலுவான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் – 4 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தல்

இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  பேரவைக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளன.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஃபோரம் ஆசியா, மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் ஆகிய நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது உட்பட, இலங்கையில் இடம்பெற்று வரும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காணுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் குறித்த மனித உரிமை அமைப்புக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளன