பாகிஸ்தானின் மத நிந்தனை சட்டம் இன அழிப்பிற்கு சமம் – பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் தெரிவிப்பு

Pakistan 1000x600 1 பாகிஸ்தானின் மத நிந்தனை சட்டம் இன அழிப்பிற்கு சமம் – பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் தெரிவிப்பு

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டங்கள் குறித்த பிரஸ்ஸல்ஸ் பத்திரிகைக் கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில்  அந்தச் சட்டமானது இனச் சுத்திரிகரிப்புக்குச் சமம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமியம் மற்றும் பாகிஸ்தானின் முஸ்லீம் பெரும்பான்மையினரின் மத உணர்வுத்திறன் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான நிந்தனைச் சட்டங்கள் காவல்துறை மற்றும் நீதித்துறையால் தெளிவற்ற முறையில் வடிவமைக்கப்பட்டு தன்னிச்சையாக செயல் படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் படுமோசமான முறையில் துன்புறுத்தப் படுவதுடன் துஷ்பிரயோகங் களுக்கும் உள்ளாக்கப் படுகின்றனர்.

ஆனால், இது போன்ற நிலைமைகள் இருந்த போதிலும், பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதில் ஐரோப்பிய ஒன்றியம் தவறு விட்டுள்ளதாகவும் அந்த மாநாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான சட்டங்களை இரத்து செய்ய பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தெய்வ நிந்தனை சட்டத்தின் அடிப்படையிலான இன அழிப்பை நியாயப்படுத்த சட்டங்களின் பயன்பாடு மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

விவாதத்தைத் தொடங்கி வைத்த முன்னாள் தெற்காசிய ஜனநாயக மன்றத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் பாலோ காசாடா கூறுகையில், “இது முக்கியமான தலைப்பு மாத்திரமல்ல நீண்ட காலமாக கையாளப்படுகின்ற விடயமும் ஆகும்.

எந்தவொரு அடித்தளமும் இல்லாமல் மக்கள் நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றனர். இந்த சிக்கலை முன்னிலைப்படுத்தியும் ஐரோப்பிய ஒன்றியம் அதிகம் விடயங்களை கையாள்வது மாத்திரமின்றி செயற்படவும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய மக்கள் கட்சியின் சர்வதேச விவகார ஆலோசகர் மானெல் மல்சாமி இதன் போது கூறுகையில், “பாகிஸ்தானில் இடம்பெறும் துன்புறுத்தல்களை எமது பாராளுமன்றம் உட்பட பல அமைப்புகள் கண்டித்துள்ளன” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021