ஆப்கானிஸ்தான்: காபூலில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஆப்கானிஸ்தான் காபூலில் பாகிஸ்தான் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் காபூலில் பாகிஸ்தான் எதிர்ப்பு: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷமிட்டபடி ஆயிரக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் வசம் முழுமையாக வராத ஒரே பகுதியாக இருந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள்   தங்கள் வசமாக்கிக் கொண்டதாக அறிவித்து அங்கு தங்களுடைய கொடியை ஏற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

இந்த நாளில் தலிபான்களுக்கு எதிராக தலைநகர் காபூலில் மக்களின் போராட்டம் நடந்துள்ளதால் அது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையடுத்து தாலிபன்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாக தேசிய எதிர்ப்பு முன்னணி எனப்படும் தலிபான் எதிர்ப்பு குழுவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தலிபான் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவதாகக் கூறி அந்த நாட்டுக்கு எதிராக ஆப்கானியர்கள் இன்று காபூல் நகரில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“பாகிஸ்தானே… ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறு  “அல்லாஹு அக்பர்”

“எங்களுக்கு சுதந்திரமான தேசம் வேண்டும், பாகிஸ்தானின் கைப்பாவை அரசு தேவையில்லை. பாகிஸ்தானே வெளியேறு,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷமிட்டனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021