திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்,இம் முறை விளைச்சல் குறைவு

நெல் அறுவடை ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் தற்போது நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. வெல்லாங் குளம், குரங்குபாஞ்சான், கிரான், வாழை மடு, மூதூர், தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய் உட்படட்ட விவசாயிகள் நெல் அறுவடையினை இயந்திரம் மூலமாக அறுவடையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இம் முறை அறுவடை குறைவாக உள்ளதாகவும் தங்களுக்கு போதுமான அசேதனப் பசளை இன்மையால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் இம் முறை   சுமார் 2000 க்கும்  க்கும் மேற்பட்ட  ஏக்கர் அளவில் நெல் விவசாயம் செய்யப்பட்ட போதிலும் அறுவடை குறைவாக உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

சேதனப் பசளை வெற்றியளிக்கவில்லை இதனால் தாங்கள் கடன் பட்டும் மனைவி பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும் இம் முறை நெற்செய்கை செய்த போதிலும் விளைச்சலின்றி பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், அரிசிக்கான விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரசி 168 ரூபாவிலிருந்து 200 ரூபா வரையில் விற்கப்படுகிறது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் – முதல் வாரமளவில் அரிசிக்கு 103 ரூபா கட்டுப்பாட்டு விலையினை விதித்து அரசு அறிவித்திருந்தது.

இருந்தபோதும் தற்போது இலங்கையில் நெல் மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசு ரத்துச் செய்துள்ளது.

இதன் காரணமாக, அரிசியினைக் கொள்வனவு செய்யும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் திண்டாட்டத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.