Tamil News
Home உலகச் செய்திகள் நடுக்கடலில் பல வாரங்களாக தத்தளித்த நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள்: மீட்ட இந்தோனேசிய மீனவர்கள் 

நடுக்கடலில் பல வாரங்களாக தத்தளித்த நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள்: மீட்ட இந்தோனேசிய மீனவர்கள் 

வங்கதேச அகதி முகாம்களில் இருந்து படகு வழியாக வெளியேறிய 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் நடுக்கடலில் பல நாட்களாக தத்தளித்த நிலையில் அவர்களை இந்தோனேசிய நாட்டு மீனவர்கள் மீட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 26ம் திகதி அன்று இந்தோனேசியாவின் வடக்கு ஏசெஹ் மாகாணத்தின் கடல் பகுதியை 174 ரோஹிங்கியா அகதிகளை கொண்ட மோசமான மரப்படகு ஒன்று வந்தடைந்துள்ளதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்படகு கடந்த நவம்பர் 25ம் திகதி அன்று வங்கதேசத்திலிருந்து கிளம்பிய நிலையில் அடுத்த சில நாட்களில் படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு அகதியின் கூற்றுப்படி, இப்படகில் பயணித்த  20 அகதிகள் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், இதற்கு முன்னதாக 57 ரோஹிங்கியா அகதிகள் இதே ஏசெஹ் மாகாணத்தின் கடல் பகுதியை சென்றடைந்திருக்கின்றனர்.

ஐ.நா அகதிகள் ஆணையத்தின் செய்திக்குறிப்பின் படி, கடந்த ஆறு வாரங்களில் சுமார் 500 ரோஹிங்கியா அகதிகளை இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ ரீதியான தாக்குதல்கள்/அரச அடக்குமுறைகள் காரணமாக, கடந்த 2017ம் ஆண்டு சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version