Home செய்திகள் சீனாவுக்கு எதிரான மேலும் ஒரு கூட்டணி

சீனாவுக்கு எதிரான மேலும் ஒரு கூட்டணி

 

unnamed 1 1 சீனாவுக்கு எதிரான மேலும் ஒரு கூட்டணி

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா தலைமையில் எனப்படும் சீனாவிற்கு எதிரான மேலும் ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதானது, பல நாடுகளின் மத்தியில் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்த புதிய கூட்டணியின் மூலம் அணுசக்தியில் இயங்கும் ஏறத்தாழ 12 நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியா பெறவுள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்த படைபல அதிகரிப்பு சீனாவுக்கு அதிக சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணுவாயுத பாவனைத் தடை உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ள அவுஸ்திரேலியா, எவ்வாறு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பயன்படுத்த முடியும் என சீனா கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்த நகர்வு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

அதேசயம், இந்த கூட்டமைப்பில் பிரான்ஸ் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதுடன், புதிய உடன்பாட்டின் மூலம் அவுஸ்திரேலியா பிரான்ஸ் உடன் முன்னர் மேற்கொள்ள 12 எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான உடன்பாடும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

40 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்பாடு கைமாற்றப்பட்டது பிரான்ஸ் நாட்டை சினமடையவைத்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம்,  இந்த கூட்டணி தமது முதுகில் குத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை உலகில் 6 நாடுகள் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் சீனாவிடம் 12 கப்பல்களும்  இந்தியாவிடம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version