Home செய்திகள் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே காணாமல் போனோர் அலுவலகம்

பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே காணாமல் போனோர் அலுவலகம்

gajenrakumar parl பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே காணாமல் போனோர் அலுவலகம்சிறிலங்காவின் நீதித்துறை நம்பகம் அற்றது – பாதிக்கப்பட்ட மக்களின் கருத் துகளை புறம் தள்ளி எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு போதும் நீதியை பெற்றுத் தராது – பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச அழுத்தங்களில் இருந்து தம்மை பாது காப்பதற்காக செய்யப்பட்ட ஒரு அலங்காரமே இந்த காணமற் போனோரை கண் டறிவதற்கான அலுவலகமே. இவை நீதியை பெற்றுக் கொடுக்கப் போவது கிடை யாது. – இந்த அலுவலகத்தின் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பொறுப்புக் கூறலில் இம்மியளவும் முன்னேற்றத்தை காட்டாது ஆறு வருடங்களை கடந்த அரசு கடத்த முடிந்தமை இதற்கு ஒரு உதாரணமாகும்.

இவ்வாறு நேற்று பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன் னணியின் தலைவர் கஜேந்திரகுமர் பொன்னம்பலம். அவரது உரையின் விபரம் வரு மாறு:

“இங்கு மேற்கொள்ளப் படவுள்ள “நீதி விசாரணைக்கு உட்படுத்தல் மற்றும் சித்திரவ தைகளுக்கு எதிரான சட்ட விதிகள்” ஆகிய திருத்தங்களை வரவேற்கிறேன். இவை முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் நடவடிக்கைகள் என்பதில் ஐயமில்லை. இங்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திரும்பத் திரும்பக் கூறியது போன்று, சொற்களில் மட்டும் வைத்துக் கொண்டிருக்காது , இவ ற்றை நடைமுறைப் படுத்துவதே மிகவும் முக்கியமானது என நான் நம்புகிறேன். இதனை நீதியமைச்சர் முழுமையாக அறிவார் எனவும் நம்புகிறேன்.

இந்நாட்டில் இயற்றப்படும் சட்டங்கள் செயற்பாட்டுக்கு வராது, வெறுமனே பேச்ச ளவில் மட்டும் வைத்திருப்பது இந்த நாட்டின் ஒரு மரபாக மாறியிருக்கிறது. முன்பு அரசியல் யாப்பில் பதினேழாவது திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றப் பட்டது. அப் போது வேறொருவர் ஜனாதிபதியாக இருந்தார் அவர் இச்சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதில் தன்னை ஈடுபட்டிருந்தவராயிருந்தும் இந்நாட்டின் அதியுச்சமான சட்டத்தில், அதாவது அரசியல் யாப்பில் கொண்டு வரப்பட்ட இத்திருத்தம் அமுல்ப டுத்தப் படவில்லை. அத்திருத்தத்தில் அரசியல் யாப்புக்கான சபை ஒன்று உருவாக்கு வதாகவிருந்தது. இறுதியில் அது நிறைவேற்றப் படவில்லை. இப்படியாக , நிறைவேற் றப்படும் சட்டங்கள் தொடர்பாக இந்நாட்டில் உருவாக்கியிருக்கிற மரபு மிகவும் மோச மானது. இதன் காரணமாக இந்நாட்டின் நீதிபரிபாலன சேவையின் நம்பகத் தன்மை யானது முற்று முழுதாக கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

இக்கருத்துகள் ஒருபுறம் இருக்க, காணமற் போனோரை கண்டறிவதற்கான பணிய கம் தொடர்பில் எனது கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். ஐ.நா. மனித உரி மைச் சபையில் கொண்டு வரப்பட்ட 30/1 தீர்மானத்தின் விளைவாக காணமற் போனோரை கண்டறிவதற்கான பணியகமும், இழப்பீடுகள் வழங்குவதற்கான பணிய கமும் அமைக்கப்பட்டன. இத்தீர்மானமானது முன்னைய அரசாங்கத்தின் உடன்பாட் டுடனேயே கொண்டு வரப்பட்டது இந்த 30/1 தீர்மானத்திற்கு உடன்பட்டதனை துரோ கத் தனமான நகர்வு என தற்போதைய அரசாங்கம் கடுமையாக விமர்சித்து வருகின்ற அதே சமயம், மறுபுறத்தில், ஐ.நா. மனித cரிமைகள் பேரவையின் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகின்ற நாங்கள், மேற்படி தீர்மானமானது பாதிக்கப் பட்டவர்களுக்கு உண்மையில் துரோகமிழைத்துள்ளதாகவே கருதுகிறோம்.

ஒரு நாட்டின் பெயர் குறித்த தீர்மானமானது, அந்நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளதனை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு பொறுப்பு கூறலை உறுதிப்படு த்துதற்காகவே கொண்டு வரப்படுகிறது. உண்மையான அர்த்தத்தில், முன்னைய அரசாங்கமானது பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, பொறுப்புக் கூறவைப்பதற்கான நெருக்குவாரத்திலிருந்து சிறிலங்காவைக் காப்பாற்றியிருக்கிறது.

பிரதான பிரச்சினைகளை திசை திருப்பி, முக்கியத்துவமில்லாத உதிரியான விடயங் களை சொல்லளவில் மேற்கொள்ளுவதன் மூலம் பொறுப்புக் கூறல் விடயத்தில் முன் னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதனைக் காட்டுவதற்காகவே இவற்றை முன்னைய அரசாங்கம் செய்தது. அவற்றில் ஒன்றுதான் இந்த காணாமற் போனோரை கண்டு பிடிப்பதற்கான பணியகம். இதுவிடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித cரிமைகள’ பேர வையிலும், ஐநா கட்டமைப்பிலும் ஒரு செயன்முறை இருக்கிறது. அதாவது, பொறு ப்புக் கூறல் தொடர்பில் எவ்விதமான முடிவுகள் எடுக்கப்படினும் அவை பாதிக்கப்பட்ட வர்களை மையப்படுத்தியாகவே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் இச்செ யன்முறையில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஏnனில் பாதிக்கப்பட்டவர்கள் இச்செயன்முறையில் நம்பிக்கை கொள்ளாவிடின் அவர்கள் இவ்விடயத்தில் ஒத்து ழைப்பு வழங்கப் போவதில்லை. பாதிக்கப் பட்டவர்களால் பல பரிந்துரைகள் முன் னைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டன. ஆனால் இப்பணியகத்தினை அமைக்கும் போது அவை எவற்றையும் முன்னைய அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இப்பணியகத்தின் நம்பகத் தன்மை பற்றித் திரும்பத் திரும்ப முறையிட்டு வந்தார்கள் அவர்களால் முன்வைக்கப்ட்ட முறை ப்பாடுகளிலிருந்து சில விடயங்களை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன். “இப்பணியகம் உருவாக்குவது தொடர்பான சட்டப் பிரிவு 13 இல் உபபிரிவு -2 இல் குறி பிடப்பட்டபடி இப்பணியகத்தினால் விசாரணைகளில் கண்டறியப்படுகிற எந்த விட யமும், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குளில் பயன் படுத்தப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்ப ட்டுள்ளது. இந்நிலையில் இப்பணியகமானது நீதியை நிலை நாட்டும் என்று நீங்கள் எவ்வாறு எதிர் பார்க்கலாம்?”

இப்பணியத்தின் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர் விடயத்தில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப் படவில்லை. இதில் அங்கத்துவம் வகிக்கும் சிங்கள அரசி யல்வாதிகள் சிலர், பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த எந்த ஒருவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதனை அனுமதிக்க மாட்டோம் எனத் திரும்பத் திரும்பக் கூறி வருகி றார்கள்” “நியமிக்கப்பட்ட ஏழு ஆணையாளர்களில் முன்னாள் மூத்த படையதிகா ரியும் உள்ளடக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் சென்று எவ்வாறு நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும்? அவரை இப்பொறுப்பிலிருந்து மேற்படி பணியகம் நீக்குமா?”

இவ்வாறு பலவிடயங்களை அவர்கள் பட்டியிலிட்டிருந்தார்கள். வடக்கு –கிழக்கில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இப்பணியகத்திலோ அல்லது இழப்பிடுகளை வழங் குவதற்காக அமைக்ப்பட்ட பணியகத்திலோ நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. அவர்கள் இவற்றை புறக்கணித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையினர் இப்பணியகத்திற்கு சென்று விசாரணைகளில் கலந்து கொள்ள மறுத்து விட்டனர் இத்தகைய பின்ணயிலேயே முன்னைய அரசாங்கம் இப்பணிய கத்தை இந்நாடாளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ள வைத்து உருவாக்கியது.

பொறப்புக் கூறல் விடயத்தில் சிறிதளவு முன்னேற்றமாவது ஏற்பட்டிருக்கிறது என்று சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதற்கு வெறுமனே சோடனைகளை செய்வதாக மட் டுமே அது உருவாக்கப்பட்டது. ஆதலால் இவற்றைக் காட்டி பொறுப்புக் கூறல் விடய த்தினை எவ்வித முன்னேற்றமுமின்றி ஆறு வருடங்களாக முன்னைய அரசாங்கத்தால் இழுத்துச் செல்ல முடிந்தது. இந்த அரசாங்கமும் மனித உரிமைச் சபையின் 30/1 தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மேற்படி இரண்டு பணியகங்களையும் வைத்திருக்க முனைவது ஆச்சரியத்துக்குரிய விடயமல்லை. போர் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களுக்கும் பின்னரும் சாதாரண மக்களுக்கு எதிராக இராணுவ த்தினரால் பாரிய குற்றச் செயல்கள் இழைக்கப்பட்டன என்பதனை புரிந்து கொள்ள முடியாதிருப்பது மிகவும் துன்பகரமான நிலைமை. தனது மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஒரு நாட்டின் கடமை. இராணுவத்தினர் இவ்வாறான குற்றச் செயல்க ளைச் செய்தருந்தால் அவர்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வர சாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னார் இவ்வாறான குற்றச் செயல் நடை பெற்றதனை தெரிந்து வைத்துக் கொண் டும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது இந்த நாடு எவ்வாறான துன்பகரமான நிலையிலிருக்கிறது என்பதனை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்விதமான கலாச்சாரம் தொடருமானல் குற்றம் புரிபவர்கள் தண்டனை விலக்குப் பெறுகிற ஒரு நிலையே உருவாகும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version