டெல்டாவைவிட வேகமாகப் பரவும் ஒமைக்ரான்:  WHO எச்சரிக்கை

“தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட   ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவியுள்ளது. டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ் குறைக்கிறது” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் திகதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ்  அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் தடையும் விதித்துள்ளன.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு  அமை ப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில், வேகமாகப் பரவும் ஒமைக்ரான் என்றும், பாதிப்பின் அளவில் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்றும் முதல் கட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்தது. தற்போது கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, சமூகப்பரவல் ஏற்பட்டால் டெல்டா வைரஸைவிட அதிகமான வேகத்தில் பரவி அதன் புள்ளிவிவரங்களை முந்திவிடும்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad டெல்டாவைவிட வேகமாகப் பரவும் ஒமைக்ரான்:  WHO எச்சரிக்கை