Home உலகச் செய்திகள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது-WHO

மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது-WHO

ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது

மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது என்று உலக சுகாதாரம் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரான் தொற்று தடுப்பூசி அதிகமாகப் போடப்பட்ட பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. சமீப நாட்களாக இந்தியா உட்பட சில நாடுகளில் தொற்று பரவல் குறைந்து வந்து கொண்டிருந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் ஏற்பட்டு மீண்டும் நிலைமை மோசமாக ஆரம்பித்துள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஒமிக்ரான் தொற்றினால் மூன்றாவது அலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும், ஒமிக்ரான் வைரஸ் பற்றிய தகவல்கள் எதுவும் முழுமையாக தெரியவில்லை.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரான் அதிகமாகப் பரவுகிறது என்றும் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மையிலிருந்து தப்பிக்கிறது என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுவரை 89 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. டெல்டாவை விட ஒமிக்ரான் கணிசமான வளர்ச்சியைக் கொண்டுள்ளதால், சமூகப் பரவலாக மாறும்போது பாதிப்பில் டெல்டாவை மிஞ்சும் என்பதற்கு உறுதியான சான்று உள்ளது. ஒவ்வொரு 1.5 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது. அதிகளவு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் நாடுகளிலேயே ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version