மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவிலும் தாதியர்கள் போராட்டம்

தாதியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் தாதியர்கள் போராட்டம் இன்று  நடைபெற்றுள்ளது.

அத்துடன் 44 தொழில் சங்கங்களும் இணைந்து தொழில் சங்க புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார துறை ஊழியர்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்க வேண்டும், கடமைக்கு சமூகமளிக்காத இடையூறுகள்  உள்ள சுகாதார ஊழியர்களுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது வைத்திய நிலையங்களில் கடமையாற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

தாதியர்கள் போராட்டம்

அதே போல்  முல்லைத்தீவு மாவட்ட தாதியர் மருத்துவ சங்கத்தினர்  பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியள்ளார்கள்.

கொரோனா காலத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், இந்த காலத்தில் மேலதிக நேர விசேட தின கொடுப்பனவினை கட்டுப்பாடு இன்றி வழங்குதல், சுகாதார ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கையினை முன்வைத்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது நிறைவு பெறாத பட்சத்தில் மீண்டும் 27 ஆம் திகதி 5 மணிநேரம்  பணியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021