Home செய்திகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா வைத்திய சாலை தாதியர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலை காரணமாக வைத்தியசாலை நோக்கி வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

IMG 20210701 090121 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மேலும் முற்கூட்டியே இந்த பணிப்புறக்கணிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால் பணம் செலவழித்து வைத்தியசாலைக்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்காது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை முதல் இரண்டு நாள் சுகயீன விடு முறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தாதிய உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும்,அவர்களின் பிரச்சினைகளுக்கு இது வரை எவ்வித தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று  வியாழக்கிழமை காலை முதல் 2 நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136

Exit mobile version