Home செய்திகள் நவம்பர் 20 நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும்: ஆயர்களின் கோரிக்கை தொடர்பில் கடும் அதிருப்தி-பீற்றர் இழஞ்செழியன்

நவம்பர் 20 நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும்: ஆயர்களின் கோரிக்கை தொடர்பில் கடும் அதிருப்தி-பீற்றர் இழஞ்செழியன்

ஆயர்களின் கோரிக்கை தொடர்பில் கடும் அதிருப்தி

தமிழ் தேசத்தினுடைய  வரலாற்றிலே  எம்   இனத்திற்காக போராடி மரணித்தவர்களுடைய  வரலாற்று நாள்  நவம்பர் 27. அன்றைய தினத்தை மாற்றி அமைக்கும் சக்தியாக இன்று வடக்கு கிழக்கினை சேர்ந்த ஆயர் பேரவை முனைகின்றதாக என்ற கேள்வி எழுகின்றது. ஆயர்களின் கோரிக்கை தொடர்பில் கடும் அதிருப்தி தெரிவித்து தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன்  ஊடக சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இன்று மாலை  முல்லைத்தீவு  ஊடக அமையத்தில்  இன்று நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

“உண்மையிலேயே நானும் ஒரு கத்தோலிக்கன்தான். நானும் ஒரு மாவீரனின் சகோதரன் என்ற அடிப்படையிலே இந்த வடக்கு கிழக்கினை சேர்ந்த ஆயர் பேரவையிடம்  கோரிக்கையாக இதை  முன்வைக்கிறேன்.  கத்தோலிக்கர்கள் கார்த்திகை மாதம் இரண்டாம் திகதி இறந்த ஆத்மாக்களுக்கான ஒரு  திருவிழாவாக  சேமக்கலைகளிலே இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது .

இருந்த போதும் அதே மாதத்தில் எம் தேசியத்தின்பால் எமக்காக போராடி மரணித்த மாவீரர்களுடைய நாளாக நவம்பர் 27ம் திகதி முப்பது நாப்பது வருடங்களாக நாங்கள் அனுஸ்ரித்து வருகிறோம். இது கடந்த காலங்களிலும் தொடர்ந்து வருகிறது. அதே நாளிலே இதே கத்தோலிக்க மதத்தை சேர்ந்த  ஆயர்கள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பாதிரியார்கள் அந்த நாளிலே அஞ்சலி செலுத்தி வந்துள்ளார்கள்.

ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னர் சில செய்திகளை பார்த்திருந்தேன். உயிரிழந்த உறவுகளுக்கு எதிர்வரும் 20 ம் திகதி அஞ்சலி செலுத்த ஒன்றுகூடுமாறு கோரியிருந்தனர். இதன் பின்னர் பல்வேறு எதிர்ப்புக்கள் வந்ததன் பின்னணியில் நேற்றைய தினம் செய்திகளில் பாத்திருந்தேன். கத்தோலிக்கர்களை மட்டும் அழைத்ததாக  உண்மையிலேயே கத்தோலிக்கர்கள் நவம்பர் 2ம் திகதி தமது திருவிழாவை கொண்டாடிவருகின்ற நிலையில் மீண்டும் ஒரு நாளை கொண்டாடுவது என்பது சில வேளைகளில் எமது தமிழ் தேசியத்தின்பால் உயிரிழந்த மாவீரர்களுடைய நினைவு நாளை வேறொரு சக்தியினூடாக அந்த நாளை அழிப்பதற்காக தான் இந்த அழைப்பை விடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version