Home செய்திகள் எல்லை தாண்டும் இந்திய மீனவரால் வடக்கு கடற்றொழில் பாதிப்பு; சமாசத் தலைவர்

எல்லை தாண்டும் இந்திய மீனவரால் வடக்கு கடற்றொழில் பாதிப்பு; சமாசத் தலைவர்

09.a 1 எல்லை தாண்டும் இந்திய மீனவரால் வடக்கு கடற்றொழில் பாதிப்பு; சமாசத் தலைவர்மீண்டும் எல்லை தாண்டி வடக்கு கடற் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்களால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரும் யாழ்.மாவட்ட கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவருமான நாகராசா வர்ணகுலசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“கடந்த இரண்டு மாத காலமாக வடக்கு கடலில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் அத்துமீறல் இல்லாத நிலை காணப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் முதல் மீண்டும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி வடக்கு கடற் பகுதியில் இடம் பெறுகிறது.

இதனால் நமது நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கடற் தொழில் உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளன.

இது தொடர்பாக பல காலமாக இலங்கை இந்திய – பிரதிநிதிகளுடன் பேசியும் எந்த விதமான இழப்பீடுகளோ நிவாரணங்களோ கிடைக்கவில்லை.

தற்போதும் மீண்டும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால் பாதிக்கப்படும் நிலையில் தொடர்ந்தும் இவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மீனவர்கள் இழக்க முடியாது.

எனவே எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

Exit mobile version