புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை வடகொரியா சோதித்த – தென்கொரியா ஆய்வு

புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை சோதித்த வடகொரியா

ஜப்பானின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை சோதித்த வடகொரியா செய்தி முகமையான கே.சி.என்.ஏ உறுதிப்படுத்தியுள்ளது.

க்ரூஸ் ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை.

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவும் போதும், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

தங்களின் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. வடகொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

வடகொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021