வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

இன்று புதன்கிழமை காலை வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தலைநகர் பியாங்யாங்கில் சுனான் பகுதியிலிருந்து ஒரு மணி நேர இடைவெளியில் இந்த மூன்று ஏவுகணைகளும் ஏவப்பட்டன என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

குறைந்தபட்சம் இரண்டு ஏவுகணைகள் புதன்கிழமை ஏவப்பட்டதாக உறுதி செய்துள்ள ஜப்பான் அதற்கு மேலதிக ஏவுகணைகளும் வடகொரியாவிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வடகொரியா அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன் தமது தென் கொரியா மற்றும் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய சில மணி நேரங்களிலேயே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

Tamil News