“ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியது குறித்து வருத்தம் இல்லை” – அதிபர் ஜோ பைடன்

bidenjoe 080321getty biden aapi "ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியது குறித்து வருத்தம் இல்லை" – அதிபர் ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து தம் நாட்டுப் படைகளை விலக்க முடிவு செய்தது குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தலிபான்களை எதிர்க்க அந்நாட்டு தலைவர்கள் “தங்கள் நாட்டுக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிய பின்னர் அந்நாட்டில் தலிபன்கள்  எட்டு மாகாணங்களின் தலைநகர்களை   கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கான் கடந்து வந்த பாதை

2001- டிசம்பர் 7- காந்தகாரில் இரு்ந்து முல்லா ஓமர் விலகிச் சென்றபின், தலிபான் ஆட்சி சீர்குலையத் தொடங்கியது.

2001-டிச 22- காபுல் நகருக்கு கர்ஸாய் வருகை. ஆப்கானை நிர்வகிக்கும் 29 உறுப்பினர்களுக்கும் கர்ஸாய் தலைவராகப் பொறுப்பேற்பு

2004-2009- ஆப்கானில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு, அங்கு கர்ஸாய் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2014-ஏப்பரல்.5- ஆப்கானிஸ்தானில் நடந்த தேர்தலில் அஸ்ரப் கானி, அப்துல்லா அப்துல்லா இருவரும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன்பின் அதிகாரப் பகிர்வு அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேச்சுவார்த்தையில் அஷ்ரப் கானி அதிபராகவும், அப்துல்லா தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டனர்.

2015-2018-  தலிபான்கள் மீண்டும் வலிமையாக உருவெடுத்து, நாள்தோறும் ஆப்கான் அரசுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் எதிராகத் தாக்குதல் நடத்தினர். கிழக்குப் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகளின்  ஆதிக்கம் உருவாகியது, தலிபான்கள் பாதிக்கும் மேற்பட்ட நாட்டை கைப்பற்றினர்.

2018- செப்டம்பர்- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் வகையில் தலிபான்களுடன் பேச்சு நடத்த அமெரிக்க அதிகாரி ஜல்மே கலிஜாத்தை நியமித்தார்

2019 செப்- ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு பலமாதங்கள் முடிவு அறிவிக்கப்படவில்லை.

2019, நவம்பர் 24- ஆப்கானிஸ்தான் சென்று அமெரிக்கப் படைகளை அதிபர் ட்ரம்ப் பார்வையிட்டார். தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

2020, பெப்ரவரி18- ஆப்கானிஸ்தான் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அப்துல்லா தேர்தல் முடிவை ஏற்க மறுத்து விட்டார்

2020, பெப்29- அமெரிக்கா, தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

ilakku-weekly-epaper-141-august-01-2021