யாரும் நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை- ரணில்

உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டளவில் வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இளைஞர்கள் பங்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் கடந்த 3ஆம் திகதி இளைஞர்களுடன் நடந்த இணையத்தள உரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.