அரசாங்கம் வழங்கும் ஒரு இலட்சம் தேவையில்லை : வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கம்

அரசாங்கம் வழங்கும் ஒரு இலட்சம் தேவையில்லை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஒரு இலட்சம் தேவையில்லை என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஒன்றைத் திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் அவர்களுக்கான இழப்பீடாக   ஒரு இலட்சம் ரூபா வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

கடந்த பல வருடங்களாக அரசாங்கம் தங்களை ஏமாற்றி வருவதாகவும் அரசினால் வழங்கப்படும் நிதி தமக்கு தேவையில்லை எனவும் தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதி மாத்திரமே தமக்கு வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் சந்தர்ப்பத்தின் போது சர்வதேசத்திற்கும் தமது கோரிக்கையை தெரிவிப்பதாகவும்  அவர்கள் கூறியுள்ளனர்.

Tamil News