Home உலகச் செய்திகள் ‘இந்தியாவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு என்று சட்டம் இல்லை’: மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில்...

‘இந்தியாவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு என்று சட்டம் இல்லை’: மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கவலை

தஞ்சம் கோருவோருக்கு என்று சட்டம்

தஞ்சம் கோருவோருக்கு என்று சட்டம் இல்லை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஜனவரி 20 அன்று “இந்தியாவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பது” குறித்து ஒரு கூட்டத்தை நடத்தியது.

இந்த கூட்டத்தின் குறிப்புகள் கடந்த பிப்ரவரி 17ம் திகதி அன்று வெளியிடப்பட்ட நிலையில், இந்தியாவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு ஒரு குறிப்பிட்ட சட்டம் இல்லை என்ற பிரச்சினையை பலர் முன்வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் உருவாக்கப்பட்டு அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படாத புகலிடம் மற்றும் அகதிகள் தொடர்பான மாதிரி சட்டங்களை ஒரு வல்லுநர் குழு கொண்டு திருத்தலாம் என ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி குமார் கூட்டத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version