Tamil News
Home செய்திகள் த ஹிந்து பத்திரிகை யின் செய்தி- அப்பாவி தமிழ் இளைஞர்களை சிறைக்குள் தள்ள வழிவகுக்கும்-அருட்தந்தை...

த ஹிந்து பத்திரிகை யின் செய்தி- அப்பாவி தமிழ் இளைஞர்களை சிறைக்குள் தள்ள வழிவகுக்கும்-அருட்தந்தை மா.சத்திவேல்

த ஹிந்து பத்திரிகை யின் “மே பதினெட்டில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தாக்குதல் நடத்த உள்ளார்கள்” என்பது அரசியல் சதி மட்டுமல்ல, வடக்கு கிழக்கில் இராணுவ கட்டமைப்பை மேலும் பலப்படுத்தவும் அப்பாவி இளைஞர்களை சிறைக்குள் தள்ளவும் வழிவகுக்கும்   என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மா.சத்திவேல் அவர்களால் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே,

த ஹிந்து பத்திரிகை யின் “மே பதினெட்டில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தாக்குதல் நடத்த உள்ளார்கள்” என்பது அரசியல் சதி மட்டுமல்ல, வடக்கு கிழக்கில் இராணுவ கட்டமைப்பை மேலும் பலப்படுத்தவும் அப்பாவி இளைஞர்களை சிறைக்குள் தள்ளவும் வழிவகுக்கும். மறைந்திருக்கும் மகிந்த ராஜபக்ச வெளியே வரு வதற்கும், காலிமுகத்தி டலின் “கோட்டா கோ ஹோம்”, அலரிமாளிகையின் முன்னால் நடக்கும் “நோ டீல் கம” போராட்டங்கள் நீர்த்து போகச் செய்வதற்கான சூழ்ச்சியாகவே கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச காலிமுகத்திடல் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்ட நிலையில் அரச பயங்கரவாதத்தின் துணையோடு வன்முறையை கட்டவிழ்த்து விட்ட நிலையில் அதுவும் தோல்வியில் முடியவே தற்போது பாதுகாப்பு கருதி தமிழர் பகுதியிலேயே மறைந்து வாழும் நிலையில் அந்த வெட்கத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில் இருந்து வெளியாகும் இந்து பத்திரிகை செய்தி துணையாக உள்ளது.

அத்தோடு தமது அரசியல் நலனுக்காக கடந்த காலங்களில் இனவாத மதவாத வன்முறைக்கு துணை நின்றவர்களின் ஆதரவோடு இனவாதத்தையும், மதவாதத்தையும் மீண்டும் தேசியக்கொடியாக்கியே ஆட்சியில் அமர்ந்தவர்கள் அதனை கைவிடவில்லை. கடந்த 9ஆம் திகதி அவர்களின் வன்முறை கும்பல் தாக்கப்பட்டதை தொடர்ந்து நீர்கொழும்பில் கிறிஸ்தவ முஸ்லிம் சமய பிரிவினரை மோத விடுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டனர். அதுவும் தோல்வி கண்ட நிலையிலேயே அடுத்த கட்டத்தில் முன்னெடுப்பாக இந்து பத்திரிக்கை செய்தி அமைந்துள்ளது.

2019 தொடர்ந்து பல்வேறு வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முயற்சி செய்தவர்கள் தற்போதைய சூழ்நிலையில் இந்து பத்திரிகையின் ஊடாக புலி புரளியை கிளப்பி அடுத்த இனகலவரத்திற்கும் விடுகிறார்களோ எனவும் சிந்திக்கத் தோன்றுகின்றது.

அரசியல் கைதிகள் தாம் எப்போது விடுதலை அடைவோம் என ஏங்கித் தவிக்கும் நிலையில் மீண்டும் வடக்கு கிழக்கின் இளைஞர்களைக் கொண்டு சிறைகளை நிரப்பும் நிலையும் ஏற்படலாம். அத்தோடு சிறைக்குள்ளேயே வன்முறையும் வெடிக்கலாம்.

2009 தொடர்ந்து ஆயுதம் மௌனிக்கப்பட்ட நிலையில் சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு மக்கள் சர்வதேச ரீதியில் நீதியின் கத வை தட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தாயக பிரதேசத்தில் உள்ள புல்ளுருவிக களை அடையாளங் கண்டு அவதானமாக செயற்பட வேண்டிய காலம்மிது.இது மே 18 நினைவேந்தலுக்கு பின்னரும் தூர நோக்கோடு பயணிக்க வேண்டும் என்பதையும் உண ர்த்துகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் எதிரிகள் பல்வேறு முகங்களோடு விழிப்புடன் இருக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று உணர்வு பூர்வமாக சுடரேற்றும் அனைவரும் அரசியல் எதிரிகளுக்கு துணைபோகும் அரசியலை முன்னெடுக்கமாட்டோம் எனவும் தியாகச்சுடர் முன் உறுதியேற்க வேண்டும்.அதுவே அரசியல் எதிரிகளை தோல்விகாணச் செய்யும். ஒரு இலக்கோடு அரசியல் இலக்கையும் அடைவதற்கும் வழி வகுக்கும் என்றார்.

Exit mobile version