புதிதாக உருமாற்றம் பெற்ற வைரஸ் தொடர்பில் அவதானம் தேவை

புதிதாக உருமாற்றம் பெற்ற வைரஸ்: புதிதாக உருமாற்றம் பெற்ற கொரோனோ வைரஸ் தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொலம்பியாவில் கடந்த ஜனவரி மாதம் உருமாற்றமடைந்த “மூ” எனப்படும் பி.1.621 என்ற வைரஸ் அதிக தொற்றுதலுக்கு காரணமாக உள்ளது. இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கின்றது.

மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனோ வைரஸ் பல தடவைகள் உருமாற்றம் அடையும் தகமை கொண்ட போதும் அதில பல ஆபத்துக்கள் அற்றது. எனினும் சில மிகவும் ஆபத்தானது.

ஆபத்துக்கள் கொண்ட உருமாற்றம் பெற்ற அல்பா வைரஸ் 193 நாடுகளிலும், டெல்ரா வைரஸ் 170 நாடுகளிலும் பரவியிருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021