பொத்துவிலில் புதிதாக முளைத்த புத்தர் சிலை- மக்கள் போராட்டம்

புதிதாக முளைத்த புத்தர் சிலை

அம்பாறை- பொத்துவில் பிரதேச சங்கமன்கண்டி படிமலையடிவாரத்தில் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபா்களினால் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் அப்பிரதேசத்தில் நேற்று காலை முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.

புத்தர் சிலையை அவ்விடத்திலிருந்து  அகற்றுமாறு கோரிக்கை முன்வைத்து அப்பகுதி அரசியல்  வாதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டனர். அம்மாறைமாவட்ட பொத்துவில் பிரதேச செயலாளரின் நிர்வாக எல்லைக்குட்பட்ட தாண்டியடி,சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்திலேயே இரவோடு இரவாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அச்சிலையை உடனடியாக அகற்றக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து   திருக்கோவில் பொத்துவில் காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பொத்துவில் பிரதேச செயலள உதவிப் பிரதேச செயலாளர்,ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில், பௌத்த பிக்கு ஒருவர், புத்தர் சிலையை அகற்ற முடியாதெனக் கூறியுள்ளார்.  எனவே    இதைத்தொடர்ந்து  திருக்கோவில் பொத்துவில் காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரு நாட்களுக்குள் புதிதாக முளைத்த புத்தர் சிலையை அகற்றுவதாக காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.