நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல்- இலங்கையின் மதத்தலைவர்கள் கண்டனம்

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல்

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல்: நியூசிலாந்தில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலங்கையின் நான்கு மதத் தலைவர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வண.கலாநிதி அங்ரஹரே கஷ்ஸப நாயக தேரர்,சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள்,அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நியூசிலாந்தின் நகரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சோகமான செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்கான இடத்தை நாம் நினைக்கும் போது, ​​எங்களுக்கு மிகுந்த கவலை ஏற்படுகிறது.

ஒவ்வொரு மனித வாழ்க்கையையும் தயவுடனும் மரியாதையுடனும் நடத்தும்படி நாம் முழு உலக மக்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். நாம் அதை இறைவனின் ஒரு பெரியதோர் அருளாகப் பார்க்கிறோம், ஏனென்றால் அது அழிக்கப்பட்டால், அது யாராலும் திரும்பப்பெற முடியாத ஒரு பொக்கிஷமாகும்.

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை மதிக்கும் இலங்கையர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் என்ற ரீதியில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அதிர வைக்கும் இந்தக் கொடூரமான செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கும் எங்கள் தாய்நாட்டுக்கும் அனைத்து மனித இனத்துக்கும் அமைதியும் சமாதானமும் என்றென்றும் நிலைத்து நிற்க நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

நியூசிலாந்தில்  Auckland நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் ஆறு பேரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய  இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரை அந்நாட்டுக் காவல்துறையினர் நேற்று  சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-144-august-22-2021