Home செய்திகள் இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மட்டக்களப்புக்கு பயணம்

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மட்டக்களப்புக்கு பயணம்

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மட்டக்களப்புக்கு பயணம்

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மட்டக்களப்புக்கு பயணம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 50வருடத்தில் எதிர்கொள்ளாத நெருக்கடியை மட்டக்களப்பு மாநகர மக்கள் இன்று எதிர்கொள்வதாக மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதி மக்களின் அபிவிருத்திக்கு நியூசிலாந்து என்றும் உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு இன்று(08) மாலை இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்லே, அப்ளிடன், உதவி தூதுவர் அன்ரூவ் ரவ்ளர் ஆகியோர் விஜயம் செய்தனர்.

இவர்களை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்.பிரதி முதல்வர் கே.சத்தியசீலன் ஆகியோர் வரவேற்றதுடன் மாநகரசபையில் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “இந்த அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை, விவசாயக் கொள்கை சம்பந்தமாக நாங்கள் கலந்துரையாடினோம். அந்தப் பிழையான கொள்கைகள் காரணமாக எமது மாநகரத்தின் மக்கள் படுகின்ற துன்பங்கள் சம்பந்தமாக நாங்கள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கே முண்டியடிக்கின்ற நிர்ப்பந்தம், சீமேந்துகள் பெறுவதற்குக் கூட சிபாரிசு கேட்கின்ற அளவிற்கு இந்த அரசாங்கத்தின் செயற்பாடு எமது மக்களை கொண்டுவந்திருக்கின்றது.

கடந்த ஐம்பது வருட காலத்தில் இவ்வாறானதொரு சூழலை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. இதனை ஒரு புதுமையான நிர்வாகமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

சிறுவர் சிநேக நகர அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் அதற்கான நிதியுதவிகளை எவ்வாறு நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றோம் என்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடியிருக்கின்றோம்” என்றார்.

Exit mobile version