தேவையின்றி வெளியேறாதீர்கள்; புதிய கட்டுப்பாடுகள் நடைமுறை

புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைதேவையின்றி வெளியேறாதீர்கள்; புதிய கட்டுப்பாடுகள் நடைமுறை: குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் வகையில், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் எஸ். சிறீதரன் அறிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு விடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் அவற்றின் திறனில் ஒன்றில் மூன்று பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 200 பேருக்கு மிகாமல் திருமண வைபவங்களை நடத்த முடியும் என்றும் திறந்தவெளி எனின், 250 பேர் அனுமதிக்கப்படுவர்.

உணவகங்களில் அவற்றின் திறனில் ஒன்றில் மூன்று பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 100 பேர் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். திறந்த வெளியாயின் 150 பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad தேவையின்றி வெளியேறாதீர்கள்; புதிய கட்டுப்பாடுகள் நடைமுறை