Tamil News
Home செய்திகள் வெளிநாட்டு கப்பல் வருகை அனுமதிக்கு விரைவில் புதிய நடைமுறை!

வெளிநாட்டு கப்பல் வருகை அனுமதிக்கு விரைவில் புதிய நடைமுறை!

இலங்கையில் வெளிநாட்டு போர்க்கப்பல்கள், இராணுவ விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்காக தற்போதுள்ள நிலையான செயற்பாட்டு நடைமுறையை (SOP) திருத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் எதிர்காலத்தில் இந்த விடயத்தில் புதிய முறையை உருவாக்குவதே குழுவின் பணி என அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

ஜனவரி மாதம், இலங்கை தனது கடற்பரப்பில் இயங்கும் வெளிநாட்டு கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு ஒரு வருட கால தடை விதித்தது.

தடைக்காலம் நீக்கப்பட்டு, தற்போதுள்ள நடைமுறையின் கீழ் ஆய்வுக் கப்பல்களுக்கான இராஜதந்திர அனுமதி தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கும் வகையில், திருத்தப்பட்ட நடைமுறையை குழு விரைவில் இறுதி செய்யும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version