Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான புதிய புலம்பெயர்வு ஒப்பந்தம் 

அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான புதிய புலம்பெயர்வு ஒப்பந்தம் 

அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் புலம்பெயர்வு ஒப்பந்தம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் மாணவர்கள், பட்டதாரிகள், ஆய்வாளர்கள், தொழில் செய்வோர் புலம்பெயர்வதை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்த வந்தது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்குப்படி, கடந்த 2016ம் ஆண்டு முதல் சுமார் 10 இலட்சம் வெளிநாட்டினர் புலம்பெயர்ந்திருக்கின்றனர். அதில் 25 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.  தடுப்பு முகாமை நடத்த ஊழல் தொழிலதிபருக்கு பல மில்லியன் டாலர்களை வழங்கிய முன்னாள் அவுஸ்திரேலிய அரசாங்கம்

நவுருத்தீவில் இருக்கும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சேவைகளை வழங்குவதற்காக ஊழல் வழக்கில் குற்றவாளி எனக் கூறப்பட்ட தொழிலதிபருக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை தாராளவாத கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

மொசமில் குலாமபாஸ் போஜானி என அறியப்படும் அத்தொழிலதிபர், பாஸ்பேட் சுரங்க ஒப்பந்தங்களை பெறுவதற்காக நவுரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சருக்கும் 120,000 டொலர்களை இலஞ்சமாக கொடுத்திருக்கிறார். இந்த வழக்கில் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையிலும் இவரது நிறுவனத்துக்கு 17.5 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான தடுப்பு முகாம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவால் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதில் மந்தநிலை 

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் மூலம், அவுஸ்திரேலியாவில் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்ட அகதிகளில் 450 அகதிகள் நியூசிலாந்தில் மூன்றாண்டுகளில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இதுவரை சொற்பமான அளவிலேயே மீள்குடியேற்றம் நடந்துள்ள சூழலில், இத்தாமதம் குறித்து அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

“முதல் ஆண்டில் 150 அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை,” என அகதிகள் நல செயல்பாட்டாளரான ஐன் ரிண்டோல் கூறியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் செயல்பட்ட மற்றொரு தீவான மனுஸ் தீவில் இருந்த அகதிகள் மீள்குடியமர்த்தல் பட்டியலில் விடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 அகதிகள் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், வரும் ஜூன் 30யுடன் முடிவடைய இருக்கும் ஓராண்டில் வெறும் 31 அகதிகள் மட்டுமே நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்பட்டிருப்பதற்கான சூழல் நிலவுகிறது.

Exit mobile version