“ஒரே நாடு ஒரே சட்டம்“- பொருத்தமற்ற ஒருவரிடம்  தலைமைத்துவத்தை வழங்கியதை ஒரு போதும் ஏற்க முடியாது- முஸம்மில் முகைதீன்

 

ஒரு போதும் ஏற்க முடியாது

சிறையில் அடைக்கப்பட்டு குற்றவாளியாகவும் இனவாதத்தை தூண்டியும் முஸ்லிம்களை நசுக்க நினைக்கின்ற பொருத்தமற்ற ஒருவருக்கு “ஒரே நாடு ஒரே சட்டம், தலைமைத்துவத்தை வழங்கி இருப்பதனை  ஒரு போதும் ஏற்க முடியாது என தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் உள்ள கட்சி தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,  சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ் சமூகத்தில் இருந்து இந்த செயலணியில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை 13 பேர் கொண்ட குழுவில் ஞானசார தேரரை நியமித்திருப்பது மேலும் முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்கி நசுக்கும் செயலாக பார்க்க வேண்டியுள்ளது.

இனவாதத்தை கையில் எடுத்து நாட்டை குழப்பும் சூழ்ச்சிகாரரிடம் ஒப்படைப்பது சிறுபான்மை சமூகத்தை இல்லாமல் செய்யும் ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.

இதில் நியமிக்கப்பட்ட நால்வர் முஸ்லிம்கள் இவர்கள் யாரென்றே தெரியாது இந்த நாட்டில் இருப்பவர்களா என்பதும் தெரியாது . இந்த செயலணி தொடர்பில் ஜனாதிபதி மீண்டும் பரிசீலனை செய்து அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட குழுவினரை நியமிக்க வேண்டும் என்றார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad "ஒரே நாடு ஒரே சட்டம்“- பொருத்தமற்ற ஒருவரிடம்  தலைமைத்துவத்தை வழங்கியதை ஒரு போதும் ஏற்க முடியாது- முஸம்மில் முகைதீன்