கசூரினா கடற்படை முகாமை அகற்ற பணம் கோரியுள்ள கடற்படை

கசூ­ரினா கடற்­க­ரை­யின் சுற்­றுலா மையத்­தில் 4 பரப்பு விஸ்­தீ­ர­ணத்­தில் உள்ள கடற்­படை முகாமை அகற்­று­வ­தற்குக் கடற்­ப­டை­யி­னர் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர். அதற்­காக கடற்­ப­டை­யி­னர் கோரிய பணம் இன்று பிர­தேச சபை­யால் காசோலை மூலம் வழங்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கசூ­ரினா கடற்­கரை சுற்­றுலா மையத்­தில் கடற்­படை முகாம் அமைக்­கப்­பட்­டி­ருந்­த­தால், அந்­தப் பகு­தியை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. அத்து­டன் சுற்­று­லா­வி­க­ளும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. அத­னால் அங்­கி­ருந்து கடற்­படை முகாமை அகற்ற வேண்­டும் என்று பிர­தேச சபை கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

நேற்று பிர­தேச சபை மாதாந்த அமர்வு கசூ­ரினா பொது­நோக்கு மண்­ட­பத்­தில் நடைபெற்ற நிலை­யில், காரை­ந­கர் கடற்­க­ரைப் பொறுப்­ப­தி­கா­ரி­கள் இரு­வர் கலந்து கொண்­ட­னர்.

கடற்­ப­டை­யி­ன­ரால் அமைக்­கப்­பட்­டுள்ள நிரந்­தக் கட்­ட­டத்­துக்­கான பெறு­ம­தி­யைச் செலுத்­து­வ­து­டன், பிறி­தொரு காணி­யை­யும் வழங்­கி­னால் அந்­தப் பகு­தி­யில் இருந்து உட­ன­டி­யாக வில­கிக் கொள்­ள­வோம் என்று கடற்­படை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கடற்­ப­டை­யி­னர் அமைத்­துள்ள நிரந்­த­ரக் கட்­ட­டத்­தின் பெறு­மதி 13 லட்­சத்து 20 ஆயிரம் ரூபா என்று விலை மதிப்­பீட்­டுத் திணைக்­க­ளம் மதிப்­பிட்­டி­ருந்­தது.

பணத்­தை­யும், சுற்­றுலா மையத்­துக்கு வெளியே காணி­யொன்றை வழங்­க­வும் பிர­தேச சபைக் கூட்­டத்­தில் நேற்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து நேற்று முதல் அந்த இடத்­தில் இருந்து கடற்­படை முகாமை அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் ஆரம்பிக்கப்­ப­டும் என்று கடற்­ப­டைப் பொறுப்­ப­தி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கடற்­ப­டைக்கு வழங்­கும் பணத்தை ஏற்­க­னவே ஒதுக்­கப்­பட்ட நிதி­யொ­துக்­கத்­தில் மீதமாக உள்ள தொகை­யில் இருந்து பயன்­ப­டுத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்டு, இன்று அதற்­கான காசோலை கடற்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­டும் என்று தெரிவிக்கப்பட்­டது.