Home செய்திகள் யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில்  சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில்  சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி

IMG 6388 1080 யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில்  சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி

1995ம் ஆண்டு, ஜூலை 9ம் நாள்  மாலை 5.45 மணியளவில்  யாழ். நவாலி புனித பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்) மீது  சிறீலங்கா விமானப் படையினரால் 10க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில்,    குழந்தைகள் பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பெருமளவிலான  மக்கள் படுகாயம் அடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது வரையில் நீதி கிடைக்காத நிலையில், இந்த படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் நினைவு கூரப்பட்டது.

இந்நிலையில், சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப் பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்றைய நாள் குறித்த தேவாலயப் பகுதியில்  காவல் துறையினர் மற்றும் அரச படைகள் பெருமளவில் குவிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version