Home உலகச் செய்திகள் போரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?

போரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?

கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?

கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா: போரால் பாதிக்கப்பட்டவர்களை மற்ற நாடுகள் ஏதிலிகளாக ஏற்றுக்கொள்ள முன்வந்தாலும் நிரந்தரக் குடியுரிமைக்கான வாய்ப்பு என்பது கேள்விக் குறியாகவே நீடித்து வருகிறது. சில சமயங்களில், சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்ற அடையாளமும்கூட அவர்கள் மீது சுமத்தப்படுகிறது.

1951-ம் ஆண்டின் ஐநா ஏதிலிகள் தொடர்பான உடன்பாட்டின்படி, ஒரு நாடு அனுமதித்தால் மட்டுமே அகதிகளால் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற முடியும். இல்லையென்றால், சொந்த நாட்டுக்குத் திரும்பியாக வேண்டும். அதுவும் இல்லையென்றால், இன்னொரு நாட்டுக்குச் சென்று அகதி என்ற நிலையிலேயே அலைந்துழல வேண்டும். குடியுரிமையைப் பெறாதவர், அந்நாட்டின் சட்டரீதியான உரிமைகளைப் பெற முடியாது.

ஏதிலிகள் தொடர்பிலான சர்வதேச உடன்பாடு, குடியுரிமைக் கோட்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அது, அனைத்துலக மனிதர்களின் கண்ணியமான வாழ்வுக்கானதாக மாற வேண்டும். போரின் பாதிப்புகளால் புகலிடம் தேடுபவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையை வழங்க முன்வரும் நாடுகள் தமக்குள் ஒன்றிணைந்து புதிய உடன்பாடுகளை எட்ட வேண்டும்.

நன்றி- இந்து தமிழ் திசை

Exit mobile version