Tamil News
Home செய்திகள் நாகர்கோவில் பள்ளிப்படுகொலை-27ஆவது ஆண்டு நினைவு

நாகர்கோவில் பள்ளிப்படுகொலை-27ஆவது ஆண்டு நினைவு

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 21 மாணவர்கள் உயிரிழந்த 27ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்படுகிறது.

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின.

எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 21 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.

Exit mobile version