Home உலகச் செய்திகள் மியான்மர் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை

மியான்மர் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை

1220062 மியான்மர் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை

மியன்மரில் அதிகரித்துள்ள கோவிட்-19 பரவலால் பாதிப்படைந்து வரும் பயணிகள், இன்று முதல் (ஜூலை 15) முதல் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

மேலும் வியாழன் இரவு 11. 59 மணி முதல் நீண்ட கால அட்டை தாரர்களும் மியன்மருக்கு பயணம் (இடைப் பயணமும் கூட) செய்த குறுகிய கால வருகை யாளர்களும் இந்நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த புதிய விதி முறை, ஏற்கெனவே சிங்கப்பூருக்குள் வர முன்னதாக அனுமதி பெற்றவர் களுக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

ஏற்கெனவே மியான்மரில் இருந்து சிங்கப்பூருக்குள்  வந்தவர்கள் 14  நாட்கள் நீடிக்கும் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவு செய்ய வேண்டும். அத்துடன் அவர்கள் பீசிஆர் சோதனையும் செய்ய வேண்டும் என்றது சிங்கப்பூர் சுகாதார அமைச்சு.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version