515 Views
நல்லூர் முடமாவடிப் பகுதியில் நேற்றிரவு நடந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இரண்டு மோட்டார் சைக் கிள்களும் முழுமையாகத் தீப்பற்றி எரிந்தன. அதில் இருவர் ஸ்தலத்தில் உயிரிழந் தனர். மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றிருவர் படுகாயமடைந் தனர்.
ஆலய வீதியில் எதிர் எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள்களே நேருக்கு நேர் மோதிய சமயம் தீ பற்றிக்கொண்டன. தீ சுவாலை விட்டு எரிந்தமையினால் தீயணைப்பு சேவையின் உதவியும் பெறப்பட்டது.
நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் அகப்பட்டவர்கள் யார் என்பது தொடர்பில் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. இதில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கோப்பாய் பொலிஸார் மீட்டு போதனா வைத்தியசாலையில் ஒப் படைத்தனர்.