ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல – காவல்துறையினரது நோக்கங்கள் ஆராயப்பட வேண்டும்

ரம்புக்கனை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினரது செயற்பாடு ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காவல்துறையினரது நோக்கங்கள் ஆராயப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில்,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி தெரிவிக்கையில்,

“இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது, சாதாரண மனிதர்கள் துப்பாக்கி ஏந்தியிருப்பதைக் காணவில்லை. ஒன்றிரண்டு பேர் கற்களையும் தடிகளையும் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியானால்,   காவல்துறையினர் அதை அடக்குவதற்கு அதே வகையான சமமான பலத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

பெரும் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படலாம். கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மக்களைக் கலைப்பதற்காகவே, மக்களைக் கொல்வற்காக அல்ல.” என்றார்.

Tamil News