Home செய்திகள் ஜனாதிபதி அழைத்த அனைத்து கட்சி மாநாட்டை பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

ஜனாதிபதி அழைத்த அனைத்து கட்சி மாநாட்டை பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அழைப்பு விடுக்கப்பட்ட அனைத்துகட்சி மாநாடு இன்று(23) கொழும்பில் அலரிமாளிகையில் நடைபெறுகின்ற நிலையில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான கட்சிகள் இதில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளன.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா மகாஜன பக்ஷய ஆகிய கட்சிகள் இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளே மாநாட்டில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் மாநாட்டை புறக்கணிக்கவுள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(22) நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version