டென்மார்க் -ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் வேட்டை-நிறம் மாறிய கடல்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள்

டென்மார்க் நாட்டின் ஆளுகையில் இருக்கும் ஃபாரோ தீவுகளை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நடக்கும் டொல்ஃபின் வேட்டை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் வேட்டையாடப்பட்டுள்ளன.

திமிங்கலம் மற்றும் டொல்ஃபின் வேட்டை இங்கு ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

இதுவரை ஒரே நாளில் வேட்டைகளின்போது டொல்ஃபின் கொல்லப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

ஞாயிறன்று ஒரே நாளில் சுமார் 1,400 டொல்ஃபின்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டபின் இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

கடலில் கொல்லப்பட்ட டொல்ஃபின்களின் உடல்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு, உள்ளூர்வாசிகளுக்கு உணவுக்காக விநியோகிக்கப்படும்.

இந்நிலையில், பல்லுயிர் பாதுகாப்புக்கான அமைப்புகள், உள்ளூர்வாசிகள் என இரு தரப்புமே இந்த வேட்டைக்கு எதிராக இப்போது குரல் எழுப்புகின்றனர். ilakku-Weekly-Epaper-146-September-05-2021