கொரோனா: இலங்கையில் கடந்த 28 நாட்களில் 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு: இலங்கையில் கடந்த 28 நாட்களில் 4000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓகஸ்ட் 27ம் திகதி மட்டும் 212 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. இது கோவிட் -19 தொற்றால் இலங்கையில் பதிவான அதிகபடியான உயிழப்பாகும். இலங்கையில் இது வரையில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 8583 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் நாட்டை ஒக்டோபர் இரண்டாம் திகதி வரை முடக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தபாத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டை ஒக்டோபர் இரண்டாம் திகதி வரை முடக்கவேண்டும் அல்லது செப்டம்பர் 18ம் திகதி வரை முடக்க வேண்டும் அவ்வாறு செய்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றமுடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ilakku-weekly-epaper-144-august-22-2021