Home உலகச் செய்திகள் COP26 பருவநிலை மாநாடு- சீனா மற்றும் ரஷ்யா கலந்துகொள்ளாதது தவறு- ஜோ பைடன்

COP26 பருவநிலை மாநாடு- சீனா மற்றும் ரஷ்யா கலந்துகொள்ளாதது தவறு- ஜோ பைடன்

சீனா மற்றும் ரஷ்யா கலந்துகொள்ளாதது தவறு

பருவநிலை மாற்றம் என்பது மிகப் பெரிய பிரமாண்ட பிரச்னை, சீனா மற்றும் ரஷ்யா பொறுப்பற்ற முறையில் காலநிலை மாநாட்டில் (COP26)  கலந்து கொள்ளாமல் பின்வாங்கிவிட்டன என்று ஜோ பைடன்  விமர்சித்துள்ளார்.  

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 மாநாட்டில் 120 உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஏற்கனவே உலக நாடுகள் பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. 2030ம் ஆண்டுக்குள் மீத்தேன் அளவைக் குறைக்க உலக அளவில் உறுதியேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, 2030ம் ஆண்டுக்குள் காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி காடுகள் அளவை அதிகரிப்பது போன்ற ஒப்பந்தங்கள் இதில் அடக்கம். காடழிப்பு ஒப்பந்தத்தில் சீனா மற்றும் ரஷ்யா இருவருமே கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலக அளவில் அதிகம் கார்பனை உமிழும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. சீனா மற்றும் ரஷ்யா கலந்துகொள்ளாதது தவறு என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

Exit mobile version