2,10,000 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக பதிவு

காணாமல் போனவர்களின் பதிவு: 30 ஓகஸ்ட் 2021 காணாமல் போனவர்கள் தொடர்பான சர்வதேச நாள் அனுட்டிப்பது தொடர்பாக

ICRC  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

காணாமல் போனவர்களின் பதிவுகாணாமல் போனவர்கள் தொடர்பான சர்வதேச நாள், 30 ஓகஸ்ட் 2021. ஆட்கள் காணாமல் போன குடும்பங்கள் மறக்கப்படக் கூடாது.

இன்றைய தினம்,  வானது. ஆயுத நெருக்கடிகள். ஏனைய வன்முறை நிலைமைகள். பேரனர்த்தங்கள், மனிதநேய அவசர நிலைகள் புலம் பெயர்வு போன்றவை காரணமாக உலகெங்கிலும் காணாமல் போன அல்லது குடும்பங்களை விட்டு பிரிக்கப்பட்ட பல ஆயிரக் கணக்கானவர்களை நினைவு கூருகிறது.

இவர்களில் பலர் இனிமேல் திரும்ப மாட்டார்கள். அவர்கள் பற்றி மீண்டும் அறிய முடியாது. இது உலகளாவிய ரீதியிலான பாரியதொரு பேரவலமாக இருக்கிறது.

“தமது அன்புக்குரியவர்கள் மறக்கப்பட வில்லை என்பதை ஆட்கள் காணாமல்போன குடும்பங்கள் அறிய வேண்டுமென நாம் விரும்புகிறோம்.

சமகாலத்தில் ‘செஞ்சிலுவை மற்றும் செம்பிறை குடும்பத் தொடர்பு வலைப் பின்னலில்’ காணாமல் போனவர்கள் என 210000 இற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளார்கள். எனினும், இந்த எண்ணிக்கை மாத்திரம் பிரச்சினையின் தீவிரத்தை சரியாக பிரதிபலிக்கவில்லை.

ICRC ஆனது இலங்கையில் ஆட்கள் காணாமல் போன குடும்பங்களின் உளவியல்-சமூக, பொருளாதார, சட்ட, நிர்வாக ரீதியான தேவைகளை தீர்ப்பதற்குரிய நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதுடன், காணாமல் போனவர் களுக்கு நேர்ந்த கதி பற்றி பதில் அளிக்கும் பொறி முறைக்காக பரிந்துரைக்கிறது என மேலும்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021