Home செய்திகள் ‘மரண சான்றிதழ் வழங்குவோம்’ என்ற வார்த்தையை தவிர்க்குமாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் கோரிக்கை 

‘மரண சான்றிதழ் வழங்குவோம்’ என்ற வார்த்தையை தவிர்க்குமாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் கோரிக்கை 

'மரண சான்றிதழ் வழங்குவோம்' என்ற வார்த்தை

இலங்கையின் 74வது சுதந்திர தினம்,  தமிழர்களுக்கு ஒரு கறுப்பு நாள் எனவும் அரசாங்கம் இனிமேல் ‘மரண சான்றிதழ் வழங்குவோம்’ என்ற வார்த்தையைப்  பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும் எனவும் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருகோணமலை அன்புவெளிபுரம்  கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா,

“இன்றைய தினம் நாட்டின் 74வது சுதந்திர தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் இன்றைய நாள்,    தமிழர்களுக்கான கறுப்பு நாள்.   இத்தனை வருடங்கள் கடந்தும் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரரின் தரவுகள் சரியாக வழங்கப்படவில்லை.   இந்த நாட்டில் எமக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை.

தாங்கள் இன்றுவரை நிம்மதியாக இந்த நாட்டில் வாழ வில்லை.  அரசாங்கத்தின் அழுத்தங்களின் காரணமாக அரச புலனாய்வு துறையினர்களின்  கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு,பின் தொடரப்பட்டு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப் படுகின்றோம்.

தமது உறவுகளுக்கு  நீதி விசாரணை இல்லாமல் எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும். எமக்கு  மரண சான்றிதழ் தேவையில்லை.   அவர்களுக்கான சரியான ஒரு நீதி மாத்திரமே வேண்டும்” என்றார்.

Exit mobile version