Home செய்திகள் அமைச்சர் லொகான் துப்பாக்கி முனையில் மிரட்டினார் – அரசியல் கைதி

அமைச்சர் லொகான் துப்பாக்கி முனையில் மிரட்டினார் – அரசியல் கைதி

21 615571cac1800 அமைச்சர் லொகான் துப்பாக்கி முனையில் மிரட்டினார் - அரசியல் கைதி

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்று அரசியல் கைதியான பூபாலசிங்கம் சூரியபாலன் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவர் இதனை தெரிவித்தார். அந்த சமயம், சந்தேகநபரான இராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

சூரியபாலன் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தவை வருமாறு,

“விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் என்னை 2019 ஜனவரி 8 ம் திகதி புளியங்குளம் பொலிஸார் கைது செய்தனர். ஏனைய 11அரசியல் கைதிகளுடன் நான் தடுத்து வைக்கப்பேட்டேன். சம்பவ தினம் சிறைச்சாலைகள் அமைச்சர் எங்களை சந்திக்க விரும்புகின்றார் விடுதலைக்கான கையெழுத்துகளை பெற விரும்புகின்றார் என சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

எங்களை வெளியில் அழைத்து சென்று வரிசையாக நிற்க செய்தனர். சிறைச்சாலையின் பிரதான அதிகாரி தலைமை சிறைக் காவலர் பல பொலிஸ் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர். ரீசேர்ட், தொப்பி அணிந்திருந்த இராஜாங்க அமைச்சர், நாங்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். நான் எனக்கு சிங்களம் தெரியாது என்று தெரிவித்தேன். அந்த சமயம், என்னை முழங்காலில் இருத்தி கைத்துப்பாக்கியை எடுத்து எனது நெற்றியில் வைத்து நான் பொய் சொல்கின்றேன் என்று கூறி என்னை அச்சுறுத்தினார்” என்று அரசியல் கைதியான சூரியபாலன் தெரிவித்தாா்.

Exit mobile version