Home செய்திகள் நீதி அமைச்சர் வீட்டில் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் மரண சான்றுதழை பெற்றுக்கொள்வாரா?

நீதி அமைச்சர் வீட்டில் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் மரண சான்றுதழை பெற்றுக்கொள்வாரா?

நீதி அமைச்சர் வீட்டில் ஒருவர் காணாமல்

வலிந்து காணாமலாக்கபட்டவர்களுக்கு மரண சான்றிதழ் பெறக் கோரும் நீதி நீதி அமைச்சர் வீட்டில் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் எவ்வித தேடுதலும் நடாத்தாமல் மரண சான்றுதலை பெற்றுக் கொள்ள ஒப்புக் கொள்வாரா? என திருகோணமலை மாவட்டத்தில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி நாகேந்திரன் ஆஷா கேள்வி யெழுப்பினார்.

திருகோணமலையில் இன்று (11) இடம் பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.  இந்த  நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமனான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை. பெரும்பான்மை மக்களும் அரசாங்கத்தின் ஆளும் தரப்பினருமே இன்று சுந்தந்திரத்தை அனுபவிக்கின்றனர். தமிழ் மக்களும் அவர்களுள் மேலும் பாதிக்கபட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவுகளின் குடும்பத்தாரும் சொல்லென்னா துன்பங்களை அனுபவித்து வருக்கின்றோம்.

அரச படைகளின் விசாரனை பின்தொடர்தல் , கண்காணித்தல் என்ற விடயங்களும் எமது குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெற்றுவருவது அவர்களை மன ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதுடன் அவர்கள் வறுமையிலும் வாடும் நிலை அதிகரித்தே காணப்படுகின்றது.

இந்த நிலையில் உள்ளக விசாரனை ஒன்றை நாடாத்தமலேயே அரசு மரண சான்றிதல் ஒன்றை பெறுமாறு எம் மத்தியில் தினிக்கும் இந்த செயற்பாட்டை  நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உள்ளக பொறி முறையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த நாம் சர்வதேச அமைப்புக்களின் விசாரணையையும் பொறிமுறையையும் தீர்வாக முடிவெடுத்து அதனை எதிர்பார்த்து நிற்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவுகளின் சங்க தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

எனவே தொடர்ச்சியாக மக்களின் விரக்தி நிலையை தொடராமல் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும் நிலைநாட்டப்படுவதும்  முக்கியமாகும் என்றார்.

Exit mobile version