அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் இந்தியா செல்கின்றார் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இந்தியா செல்கின்றார் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இந்தியா செல்கின்றார் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்: வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்தியா செல்ல உள்ளார்.

இவர் நாளை மற்றும் நாளை மறுதினம் இந்தியா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, டெல்லியில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வடக்கு மீனவர்களின் போராட்டம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இந்திய உயர்மட்ட தரப்பினருடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version