வெளிநாடுகள் பலவற்றின் தூதுவர்களுடன் அமைச்சர் பசில் பேச்சு

09.a 3 வெளிநாடுகள் பலவற்றின் தூதுவர்களுடன் அமைச்சர் பசில் பேச்சுபல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளார்கள்.

அமெரிக்கா, ஜெர்மன், சீனா, ரஷ்யா, ஐரோப்பிய சங்க  தூதுவர்களும் மற்றும் பிரித்தானிய, இந்திய  உயர் ஸ்தானிகர்களும்  நிதி அமைச்சில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து ள்ளார்கள்.

நிதியமைச்சராக தமது  கடமையை ஆரம்பித்ததன் பின்னர் முதற் தடவையாக நேற்று ராஜ தந்திரிகளை  பசில் ராஜபக்ச சந்தித்துள்ளார்.

இங்கு அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியத்தின் தூதுவர் Alaina Teplitz, ஜெர்மன் தூதுவர் Holger Lothar Seubert, ரஷ்ய தூதுவர் Yuri B.Materiy, சீன தூதுவர் Qi Zhenhong, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதுவர் DenisChaibi ஆகியோருடன் இந்திய உயர் ஸ்தானிகர் Gopal Baglay, பிரித்தானிய உயர் ஸ்தானிகர் Sarah Hulton ஆகியோர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து இரு தரப்பு கலந்துரை யாடல்களில் ஈடுபட்டார்கள்.

இருதரப்பு கலந்துரை யாடல்களில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் தலைமையில் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தை  நடை முறைப்படுத்தும் போது இலங்கை பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தி உள்ளதாகவும் மீளுருவாக்க  மின்வலு திட்டத்துக்கான உதவியை எதிர் பார்ப்பதாகவும் கூறினார்.

எரிபொருள் பாவனையை  குறைக்கும் சூழலுக்கு இசைவான  வகையில் போக்கு வரத்து துறையை மேம்படுத் துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை  அதிகரிப்பது தொடர்பாகவும்  அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதுவர் குறிப்பிட்ட தாவது மீளுருவாக்க மின்வலுவை மேம்படுத்தல் மற்றும் பசுமைப் பொருளாதாரம் குறித்து அரசு காட்டும் அக்கறைக்கு பாராட்டு தெரிவிப்ப தாகவும் கூறினார்.

உயர்ஸ் தானிகர் மத்திய அதிவேக பாதை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு  தேசிய ஒப்பந்த தாரர்களை நியமித்திருப்பது தொடர்பாக பாராட்டு தெரிவித்ததோடு, அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் எதிர் காலத்தில் வழங்க வுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய உயர் ஸ்தானிகர் கோவிட்  தொற்று நிலைமையிலும்  இலங்கை பொருளாதார வளர்ச்சி வேகத்தை முதல் காலாண்டில் 4.7% மாக  வைத்திருந்தது குறித்து மகிழ்ச்சி அடைய முடியும் என்றும், அதனை எதிர் காலத்தில் 5.5% மாக  அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.  இரு தரப்பு வர்த்தக  நடவடிக்கைகளை மிகவும் ஒத்துழைப்புடன்  மேற் கொள்வது  தொடர்பாகவும் இந்திய உயர் ஸ்தானிகர் விருப்பத்தை தெரிவித்தார்.

தற்போது இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கும் தடுப்பூசி வசதிகளை தேவைக் கேற்றவாறு எதிர் காலத்திலும் பெற்றுக் கொடுக்கும்  நடவடிக்கையை சீனா  முன்னெடுக்கும் எனவும், நாட்டின் உயர் தர முதலீட்டாளர்களை   அம்பாந்தோட்டை கைத்தொழில் வலையத்துடன் இணைப்பதற்கு  தயார் எனவும்  சீன தூதுவர் இச்சந்திப்பில் பசில் ராஜபக்சவிடம் கூறினார்

கோவிட் தொற்று நிலைமையில் தற்போது காணப்படும் பொருளாதார நிலைமை மிக விரைவில் வழமைக்கு திரும்பும் என சீனா எதிர் பார்ப்பதாகவும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் எனவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் காணப்படும் ஜெர்மன் தொழில் நுட்ப கல்லூரிகளின் வசதிகளை  அதிகரிக்கவும், சிறிய மற்றும் நடுத்தர  தொழிலுக்கான  முதலீட்டாளர்களை ஈடுபடுத்த தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் தனது நாடு எதிர் பார்ப்பதாக ஜெர்மன் தூதுவர் தெரிவித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்ச்சி  அடைய செய்து இலங்கையுடன் அன்னியோன்ய புரிந்துணர்வுடன் நடவடிக்கையில் ஈடுபட அமெரிக்கா தயார் எனவும் அமெரிக்க தூதுவர் நிதி அமைச்சர் பசில்  ராஜபக்சவுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். இலங்கையின் பசுமை பொருளாதார திட்டம் குறித்து பாராட்டு தெரிவித்த அவர் LNG மின்வலு திட்டத்திற்கான முதலீட்டாளர்களை ஈடுபடுத்தக் கூடிய  வாய்ப்புகள் தொடர்பாகவும் ஆராய்வதாக  தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல  உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 வெளிநாடுகள் பலவற்றின் தூதுவர்களுடன் அமைச்சர் பசில் பேச்சு