மியான்மரில் இராணுவ ஆட்சி- சிறைக் கைதிகள் போராட்டம்

5068 மியான்மரில் இராணுவ ஆட்சி- சிறைக் கைதிகள் போராட்டம்

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மருத்துவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சிறையில் உள்ள கைதிகள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் உள்ள இன்சைன் என்கிற சிறை அந்த நாட்டின் மிகவும் மோசமான சிறையாக அறியப்படுகிறது.

முந்தைய அரசின் மூத்த அதிகாரிகள் பலரும், இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்களும் இந்த சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இந்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சிறை மற்றும் சிறைப் பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப் பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021