Home உலகச் செய்திகள் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் Dyson நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் Dyson நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்

Dyson நிறுவனத்தின் மீது வழக்கு

Dyson நிறுவனத்தின் மீது வழக்கு: கட்டாய உழைப்பு, சுகாதாரமற்ற தங்கும் நிலைமைகள், பாதுகாப்பற்ற பணி சூழல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மலேசியாவில் இயங்கி வரும் இங்கிலாந்து நிறுவனமான Dyson நிறுவனத்தின் மீது புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்குத் தொடுத்திருக்கின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இவ்வழக்கைத் தொடுத்திருக்கின்றனர்.

அனுமதிக்கப்பட்ட 12 மணிநேர வேலை நேரத்தை கடந்து 18 மணிநேரம் வரை தாங்கள் பணியாற்றியதாகவும் தங்களுக்கு ஆண்டு விடுமுறை கூட மறுக்கப்பட்டதாகவும் அத்தொழிலாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

Exit mobile version