தவறுதலாக எல்லையைக் கடந்த 14 மெக்சிகோ இராணுவ வீரர்கள் அமெரிக்காவில் கைது

மெக்சிகோ இராணுவ வீரர்கள்

தவறுதலாக எல்லையை தாண்டிய மெக்சிகோ இராணுவ வீரர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக எல்லையை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதனை தடுக்க அமெரிக்காவில் மெக்சிகோவின் எல்லையையொட்டி அமைந்துள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல்லையோர நகரங்களில் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மெக்சிகோவில் அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ள சிகுவாகுவா மாகாணத்தின் ஜுவரெஸ் நகரில் அந்த நாட்டு இராணுவ வீரர்கள் இராணுவ வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வாகனங்கள் தவறுதலாக அமெரிக்காவின் எல்லைக்குள் நுழைந்தன. டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோ நகரில் மெக்சிகோ இராணுவ வாகனங்கள் நுழைந்தன. இதைத்தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை போலீசார் மெக்சிகோ ராணுவ வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் அந்த வாகனங்களில் இருந்த 7 இராணுவ வீரர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்தனர்.

இராணுவ வீரர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களின் கைகளில் கைவிலங்கு மாட்டி அழைத்து சென்றனர். எனினும் இதுகுறித்து மெக்சிகோ அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் மெக்சிகோ இராணுவ வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021