இலங்கைக்கான ஜேர்மனியின் கலாசார நிறுவனப் பணிப்பாளர் மற்றும் யாழ்.மாநகர முதல்வருக்கிடையில் சந்திப்பு

ஜேர்மனியின் கலாசார நிறுவனப் பணிப்பாளர்

ஜேர்மனியின் கலாசார நிறுவனப் பணிப்பாளர் சந்திப்பு

இலங்கைக்கான ஜேர்மனியின் கலாசார நிறுவனப் பணிப்பாளர் ஸ்டீபன் லிங்கர் மற்றும் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்.மாநகர சபையில் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது ஜேர்மனியின் கலாசார நிறுவனப் பணிப்பாளர் ஸ்டீபன் லிங்கர் அவர்கள் ஜேர்மன் மொழியினை பயிற்றுவிப்பதற்காக தாங்கள் ஒரு செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அவர்கள் மூலம் இங்கு ஜேர்மன் மொழியினை இங்குள்ளவர்கள் கற்றுக்கொள்ளுவதற்கு ஏதுவான வழிமுறைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அத்துடன் கலாசார நிகழ்வுகளையும் இங்குள்ளவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் ஜேர்மன் மொழி கலாசாரம் தொடர்பான நூல்களினை யாழ்ப்பாணப் பொதுசன நுலகத்திற்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கருந்து தெரிவித்த மாநகர முதல்வர் ஜேமர்மன் நாட்டில் எங்களுடைய மக்கள் வாழ்ந்து விருகின்றார்கள். அந்தவகையில் அந் நாட்டுக்கும் எமக்குமான தொடர்பு நெருக்கமானது தினமும் ஜேர்மன் நாட்டுக்கு செல்வதற்காக பலர் தங்களுடைய நாட்டு மொழியினை இங்கு கறகின்றார்கள் இந்நிலையில் நீங்களாகவே ஜேர்மன் மொழியினை இங்கு பயிற்றுவிப்பது என்பது ஒரு வரவேற்க தக்க விடயம் இது தொடர்பில் யாழ்.மாநகர சபை தனது பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றார்

கலாசார நிகழ்வுகள் தொடர்பாக தெரிவித்து இருந்தீர்கள் இந்திய அரசாங்கம் யாழ்.மாநகர சபைக்கு என்று யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தினை அமைந்து தந்திருக்கின்றது. ஆனால் அது கட்டி முடிக்கப்பட்டு இரு வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் அதனை எங்களிடம் தருவதற்கு இலங்கை அரசாங்கம் பின்னடித்து வருகின்றது. பல காரணங்களைக் கூறிவருகின்றது. இது தொடர்பில் ஜேர்மனிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நாங்கள் போரினால் பலவற்றினை இழந்திருக்கின்றோம். எங்களுடைய கலை பண்பாட்டுக் கலாசாரங்கள் அழிக்கப்பட்டது தற்போது நாங்கள் அவ் நிலையில் இருந்து மீண்டெழுந்து வருகின்றோம். அதற்கும் ஜேர்மனிய அரசாங்கம் உதவிகளை வழங்கவேண்டும் என்றார்.

ஜேர்மனிய அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற எங்களுடைய கல்விசார் மொழிசார் கலாச்சார நடவடிக்கைகளுக்கு யாழ்.மாநகர சபை தனது ஒத்துழைப்பினை வழங்கும் என்றார்.